புரட்சி கவிஞர் பாரதிக்கு தாசன் எழுச்சி மிகுந்த இடத்துக்கு சொந்தக்காரர் வரலாறு படைத்த கவிதை மிடுக்கு துடிப்பாய் இயங்கும் கவிதை ஊற்று உரத்து பேசும் சுதந்திர தாகம் உறுதி கொண்டு உழைத்த ஞானம் கரம் இருப்பதே கடமை செய்யவென கல்வி கண்திறந்த நல்ல ஆசிரியர்.புதுச்சேரி மண் கவிவாசம் கமழும் பாவேந்தர் மனதில் நிழலாய் ஓடும் மது தாக்கம் மனதில் தாக்கியதால் குடும்ப விளக்கு கோபுரமாய் உயர்ந்ததுபுதுமெட்டுப் போட்டு பாட்டு எழுதி சங்கு ஒலி எழுந்தது கீதமாய் செதுக்கிய செம்மையான தமிழ் அமுது அழியா வரம் பெற்றது என்றும். புகழ் என்பது உமக்குச் சொந்தம் புரட்சி என்பது அதில் அடக்கம் அகல் போல் சுடர் விட்டு அகம் நிறைந்த பாரதி தாசன் நிகர் இல்லை இந்த மண்ணில் நிலையான இடம் உமது வாசம் சுகம் தரும் கவிதை வரிகள் …
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
மீனாட்சிமதுரை வீதியில் மீனாட்சி! மங்களமாய் அவள் வந்திடுவாள் !தோளில் கிளியுடன் மீனாட்சி !தேரோடும் வீதியில் வந்திடுவாள் ! (மதுரை) கருணை மழையே மீனாட்சி! காண்போர்க்கு காட்சி தந்திடுவாள்! சொக்கன் மனைவிமீனாட்சி! சொர்க்க மார்க்கம் காட்டிடுவாள்? ( மதுரை)சங்கத் தமிழே மீனாட்சி! சங்கரனுடன் காட்சி தந்திடுவாள்!பிறவி மருந்தே மீனாட்சி! பிறவாமை வரம் தந்திடுவாள்! (மதுரை) பாண்டியன் மகளே மீனாட்சி !பார் புகழச் செய்திடுவாள்! புது நீரில் ஆடும் மீனாட்சி! புதுமைகள் செய்ய புறப்படுவாள் ! (மதுரை) மூங்கில் உருளையில் மீனாட்சி !ஊஞ்சல் ஆடி மகிழ்ந்திடுவாள்! ஆணவம் அழிக்கும் மீனாட்சி !அடியவர் மனதில் தங்கிடுவாள். (மதுரை)
39- போக இன்பம் தருபவன் நீயே! யோக இன்பம் நீயே! ஆகம விதிப் பலனும் நீயே ! அகந்தை அகற்றுபவன் நீயே! ஏகத்துவம் நிறைந்த தலைவன் நீயே ! ஏழிசை சுரமும் நீயே! ஈகம் போல் மணப்பவன் நீயே! ஈசன் மகனும் நீயே!
38-தண்டை அணிந்த முருகன் நீயே! தடை அகற்றுபவன் நீயே !மண்டையில் எழுதிய எழுத்தும் நீயே! மனம் நிறைந்தவன் நீயே! உண்டை உடைய பக்தன் நீயே ! உயிர் எழுத்தும் நீயே! பண்டைப் பழம் தெய்வம் நீயே ! பகுத் தறிவும் நீயே!
37-ஒழுக்க நெறி உடையவன் நீயே! ஒருமைப் பாடும் நீயே! அழுக்கு மனம் அகற்றுபவன் நீயே! அளக்கும் கருவியும் நீயே !இழுக்கு வராமல் காப்பவன் நீயே! இன்பம் தருபவன் நீயே!உழுத்துப் போகாத வாழ்வு நீயே! உள்ளம் நிறைந்தவன் நீயே!
497- பணம் பத்தும் செய்யும் குணம் கோடிக்கு மேல் செய்யும். 498-சம்பவங்கள் அனைத்தும் முன்பே தீர்மானித்தவை புரிந்தால் ஏற்பது எளிது. 499-மாய உலகில் மயக்கங்கள் பல விலகும் மனதைக் கட்ட. 500-பறவைகளின் சங்கீதம் குளிர்ந்த காற்று சூரிய பிம்பம் காலை விடியல்.501- குருவிபாட அணில் காகம் பக்கவாத்தியம் பால்கனி சபாவில் இலையாடும். 502-குற்றம் மறப்போம் மன்னிப்போம் சுயநலம் குறைந்து மகிழ்வோம் உதவி.503- உழைப்பு நேர்மை தாங்கும் இதயம் இவை மூன்றும் உயர்த்தும். 504-வழியில் வரும் களைகளைப் பிடுங்கி வள்ளுவர் வழியில் வாழ்.
491- செய்யும் முன் பலமுறை யோசி தொடங்கியபின் பின் வாங்காதே!492- அடைக்கலம் கொடுத்த பிராணிக்கு எதிர்ப்பு வந்தாலும் அனாதை ஆக்காதே! 493-வலிய மிருகமும் அன்புக்கு அடிமை மனிதப் பண்பு ஆதரவு கொடுப்பது. 494-உயிர் என்பது எல்லோருக்கும் பொது வெளிப்படுத்தும் உணர்வு வேறு.495- தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது உலக இன்பமும் ஒட்டாது. 496-ஏணியாய் உயர்த்தியவரை எட்டி உதைக்காதே ஏழ்மைக்கு வித்தாய் மாறும்.
485-வழுக்குப் பாறையில் வழுக்கி விழுந்தாலும் எழுச்சி கொண்டு எழுந்திரு.486- எண்ணம் நல்லதாக இருந்தால் நாம் எங்கு சென்றாலும் சிறப்பு. 487-அர்த்தம் உள்ள வாழ்க்கை பொதுநலம் அவதியான வாழ்க்கை சுயநலம்.488- வீட்டை தாங்குவது தூண் என்றால் மனிதனை தாங்குவது நட்பு.489- முட்புதரும் நடக்க நடக்க பாதையாகும் முயலும் செயலே வெற்றி. 490-தள்ளிப் போடும் நேரம் சேலை முள்ளில் பட்டுக் கிழிந்ததாகும்.
35-தேன் உண்ணும் முருகன் நீயே ! இனிக்கும் தமிழும் நீயே !வான் புகழும் முருகன் நீயே ! வழிகாட்டும் துணை நீயே !மான் மயில் காடு நீயே! மலர் செடியும் நீயே! நான் மாடக் கூடல் நீயே! நாழி கிணறும் நீயே!
479- செய்யும் தொழில் சுகம் ஆனால் செயல் வெற்றியை நோக்கி. 480-புத்தகம் சுவாசம் ஆனால் சொர்க்கம் பூமியில் வாழும் போதே.481-ஆற்றல் அறிவோம் அயராது உழைப்போம் வெற்றிக் கனியைப் பறிப்போம். 482-தயக்க மில்லா முயற்சி இருந்தால் தரணியில் உன்னை உயர்த்தும்.483- பணம் கொடுத்தால் பகை வரும் பார்த்து நடந்தால் நலம்.484- பேச்சு குறைவாக இருப்பின் செயல் வீச்சு அதிகமாக இருக்கும்.
