56-தட்டிப் பார்த்து தரம் பிரிப்பவன் நீயே! தடை உடைப்பவன் நீயே! நட்பு பார்த்து நல்லவன் நீயே ! நலம் செய்பவன் நீயே! முட்டிப் பார்த்து தெரிபவன் நீயே! முழுவழகு மயில் நீயே!கொட்டிப் பார்த்த பிரம்மன் நீயே! கொல்லி மலையும் நீயே !
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
உச்சி வெயில் வெப்பம் நீயே! உதிர்ந்த சருகும் நீயே! குச்சி கோல் தடியும் நீயே! குறிஞ்சித் தலைவன் நீயே! கச்சி அழகின் கலை நீயே! காமாட்சி உறவு நீயே! தச்சு தொழில் செய்வதிலும் நீயே! தஞ்சம் கொடுத்தவன் நீயே!
54-பல்லி காவல் தெய்வம் நீயே ! பார்வையில் சித்தன் நீயே !சொல்லிக் கொடுக்கும் தெய்வம் நீயே! சொல் உறுதியும் நீயே! மல்லி தரும் மருந்தும் நீயே! மன நெகிழ்வும் நீயே துல்லிய கணக்கு அறிவும் நீயே! தூய்மை இடமும் நீயே!
மகளிர் சிறப்பு கட்டுரைமகப்பேரின் மகத்துவம்5-நவக்கிரகத்தின் ஆதிக்கத்தில் ஏற்படும் வளர்ச்சி விலங்குகள் பறவைகள் கூடி வாழ காலம் நேரம் பார்ப்பதில்லை. ஆனால், மனிதர்களுக்கு அவ்வாறு இல்லை. நல்ல நாள், நல்ல நேரம், கிழமை என ஜோதிடம் பார்த்து நாள் குறிக்கிறார்கள். இது எல்லாம் எதற்கு? என நாம் நினைக்கலாம். நல்ல நேரத்தில் கர்ப்பம் தரித்தால், நல்ல நேரத்தில்… நல்ல நட்சத்திரத்தில் குழந்தை பிறக்க ஏதுவாகும். இந்த காரணத்தால் பெரியோர்களே! இந்த ஏற்பாட்டை செய்கிறார்கள். ஒரு பெண் கர்ப்பமடையும் போது ஒன்பது நவக்கிரகங்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது. முதல் இரண்டாம் மாதங்களுக்கு அதிபதி செவ்வாய் அப்போது குழந்தை தடித்து மாமிசம் பெற்று திகழும். மூன்றாம் மாதத்தில் அதிபதி குரு இம்மாதத்தில் கை, கால், சிசு தோன்றும். நான்காம் மாதத்தின் அதிபதி சூரியன் இம்மாதத்தில் வலிமையுடன் கூடிய எலும்புகள் உண்டாகும். ஐந்தாம் மாதத்தின் அதிபதி சந்திரன். இந்த மாதத்தில் மாமிச பாகத்தை வலுவடைய தக்க தோல் உண்டாகும்.…
பில்லி பிசாசு அகற்றுபவன் நீயே! பித்தனும் சித்தனும் நீயே !அல்லி மலரின் அழகும் நீயே ! ஆணவம் போக்குபவன் நீயே! சல்லிக் காசின் வடிவம் நீயே! சகல கலையும் நீயே! மல்லி மண வெண்மை நீயே! மரகதக் கல்லும் நீயே!
52-தள்ளி நின்று பார்ப்பவன் நீயே ! தங்கத் தாமரை நீயே! அள்ளி அணைக்கும் குழந்தை நீயே! அழகு முல்லை நீயே! பள்ளி படிப்பை தருபவன் நீயே ! பாரில் உயர்த்துபவன் நீயே !கள்ளிச் செடி பழம் நீயே! முள்ளுநீக்கி உண்பவன் நீயே!
51-அல்லல் போக்கும் ஆண்டவன் நீயே! அன்பு பெருக்கும் நீயே! துல்லியம் கொடுக்கும் தூயவன் நீயே! துதிக்கும் இறைவன் நீயே !கல்லல் தரும் வாணி நீயே! கற்பிக்கும் குரு நீயே! வல்லபம் செய்யும் தலைவன் நீயே! வழி காட்டியும் நீயே!
50-பார்க்கும் பார்வையில் பரிவு நீயே! பரந்த பூமியும் நீயே! சேர்க்கும் இடம் நல்லதும் நீயே! சோதித்துப் பார்ப்பவன் நீயே! வார்த்து எடுத்த அச்சும் நீயே ! வறுமை ஒழிப்பும் நீயே !கோர்த்து வரும் கூட்டம் நீயே! கோடி நன்மையும் நீயே!
49-காக்கும் தெய்வமாய் இருப்பவன் நீயே! கருணை உள்ளம் நீயே! நோக்கும் இடத்தில் இருப்பவன் நீயே! நேர்மை வித்தும் நீயே! தாக்கும் தடைகள் களைபவன் நீயே! தாங்கும் இதயமும் நீயே! வாக்கில் வல்லமை சொல் நீயே! வாழ்த்தும் வடிவம் நீயே!
48- இயக்கும் இயற்கை சக்தி நீயே! இதய தெய்வம் நீயே!மயங்கும் வாழ்வை பறிப்பவன் நீயே! மாயம் அறுப்பவன் நீயே! தயங்கும் நேரம் எதிர்ப்பு நீயே! தயவு காட்டுபவன் நீயே !சுயம்பாய் இருக்கும் சிவனும் நீயே! சுந்தர முருகன் நீயே!
