24-பச்சைச் செடியின் பசுமை நீயே! உச்சி வெயிலும் நீயே! கச்சை செய்யும் தலைவன் நீயே! கருணை காட்டுபவன் நீயே! உச்சத்தில் இருக்கும் இறைவன் நீயே! ஊக்கம் தருபவன் நீயே !அச்சம் தீர்த்து அருள்பவன் நீயே! ஆபத்தில் உதவுபவன் நீயே!
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
22-காவடி பிரியனே முருகா உன் காலடி பற்றினேன் முருகா !பாவடி தந்தாய் முருகா உன் பாதம் பணிவேன் முருகா!நாவடி வந்து முருகா நல்ல தமிழ் தருவாய் முருகா !சேவடி பற்ற முருகா சேமம் தந்து காப்பாய் முருகா!
401- எண்ண அலைகள் செல்லச் செல்ல எமன் எண்ணமும் கரையும். 402-மனதை காயப்படுத்த வார்த்தைகள் உண்டு எண்ண உறுதியே மருந்து.403- கற்றுக் கொடுப்பது ஒரு பருவம் கற்றுக் கொள்வது முழு வடிவம்.404-பொருளை சேகரித்தல் புதிய உற்சாகம் அன்பை சேகரித்தல் ஆனந்தம். 405-புயலில் சிக்கும் படகு போல் துன்பத்தில் சிக்கும் மனிதர்.406- அன்பு ஆழமான வேராய் இருந்தால் நட்பு அதன் கிளை.
21-வண்ண மயிலில் வருவாய் முருகா! வருபவர் கண் பட! திண்ண மனதில் நிற்பாய் முருகா! திடம் தந்து காப்பாய்! ஒண்ணார் ஓட போர் செய்வாய்! உறுதி தந்து காப்பாய்! சண்ணித்து இருப்போம் முருகா உன் ! சரவண பொய்கையில் காப்பாய்!
395-உண்மை உரமாய் உழைப்பு பயிராக அறுவடை சிகரம் தொடும்.396- ஏற்றம் மாற்றம் வர விரும்பின் தடைகளை தகர்த்து எறி.397- என்னும் எண்ணம் பெரியதாக இருப்பின் ஏற்றம் ஏணியாய் வரும். 398-ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் ஓயாது உழைக்கும் மனிதர். 399-சுதந்திரம் சுதந்திரம் என நாள்தோறும் கொடி பிடிப்பு குழந்தைக்கு சுதந்திரம் கதவடைப்பு. 400-கூடா நட்பு கேடு தரும் கூடி உழைக்க கோடி பயன்.
20-கண்ணொளி பட்டால் போதும் முருகா! காட்சிக்கு நீ வருவாய்! விண்ணொளி பட்டால் போதும் முருகா! வில்லாக ஒளி தருவாய்!மண்ணில் நீ வந்தால் முருகா! மனதில் மாற்றம் தருவாய்! எண்ணத்தில் ஏற்றம் தருவாய் முருகா! எழிலுடன் நீ வருவாய்!
மகளிர் சிறப்பு கட்டுரை திங்கள் தோறும் படித்து பயனடையுங்கள்.மகப்பேரின் மகத்துவம். ஆசியுரை கவிஞர் ச. மல்லிகா தமிழில் அதிக ஆர்வம் கொண்டு பல படைப்புகளை தமிழர்களுக்கு தந்துள்ளார். தமிழில் பட்டப்படிப்பு பட்டம் பெற்றதோடு வேறு பல பட்டங்களையும், விருதுகளையும், பெற்றுள்ளார். அவர்களுடைய தமிழ் இலக்கியப் பணி மிக பல எழுத்து வடிவாக மட்டுமல்லாமல், வானொலி, தொலைக்காட்சி, பட்டிமன்றத்தில் தெளிவான கருத்துக்களை பரிமாறுதல் செய்வதில் சிறந்த வல்லுனர் ஆவார். அவர்களது தமிழ் இலக்கியப் பணிகள் மற்றொரு படைப்பாக வெளிவர உள்ள “மகப்பேரின் மகத்துவம்” அவர்களது சமூக படைப்பின் மற்றொரு மைல்கல் ஆகும். ஏனைய படைப்புகள் போல இப்படைப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை. இப்புத்தகம் பெண்கள் சமூகத்திற்கு மிகவும் பயன் தரக்கூடிய நூலாக அமையும். இந்த புத்தகத்தை படிக்கும் ஒவ்வொருவரும் கருத்தரித்தல் முதல் பிரசவத்திற்கு பின்பும் பிறந்த குழந்தை பராமரிப்பு அதற்கு செய்ய வேண்டிய பணிகளை பற்றியும்…
385-உழைக்க உழைக்க உயர்வு வரும் பழிக்க பழிக்க தேயும்.386- உள்ளம் விரிய உறவு பெருகும் சருகாய் போனால் பிரியும். 387-எண்ணம் எதிரானால் ஏக்கம் பெருகும் எச்சரிக்கை உணர்வானால் ஏற்றம். 388-மூலதனம் என்பது முழு முயற்சி மூடதனம் என்பது சோம்பல்.389- உள்ளம் என்பது உயர்ந்து தெளிய கள்ளம் காணாமல் போகும். 390-திறமை தள்ளி பணம் பந்தாட நம் நாட்டிற்கு விரையம்.
379-அரும்பான ஆற்றல் உழைப்பால் மலரும் அன்பான நேசம் மணமாகும்.380- உலகம் உயர உழைப்பவன் மகான் உறவுக்காக வாழ்பவன் மனிதன்.381- காலம் ஒரு கண்ணாடி போன்றது கடமை அதன் பிம்பம். 382-உடல் அழுக்கு போக்க குளிப்பு உள்ளம் அடங்க தியானம்.383- சுறுசுறுப்பு இருந்தால் சுற்றிலும் சுகமாய் சோம்பல் சோர்வாய் முடக்கும். 384-பிறரிடம் குற்றம் காண்பவன் மனிதன் நிறைவு காண்பவன் இறைவன்.
373-எறும்பின் சுறுசுறுப்பு ஆமையின் நிதானம் எருமையின் பொறுமை பெண்.374- காடுவளர நாடு செழிக்கும் பெண்ணின் வளர்ச்சி சமுதாய வளர்ச்சி .375-முடியாத கணவனும் முயற்சி செய்வான் ஆற்றலுள்ள மனைவி யாள்.376-அதிர்ஷ்டத்தை நம்பி அமைதியாக இருந்தால் ஆற்றல் அடங்கி முடங்கும்.377- ஆத்ம திருப்தி ஆழ்மன சந்தோசம் அடையும் மார்க்கம் பிறநலன்.378- தனக்காக உழைப்பவன் ஒரு மடங்கு செய்வான் பிறருக்காக உழைப்பவன் இரு மடங்கு.
