367-சளி பிடித்தால் சுவாசம் முட்டும் சளிப்பூட்டும் வாழ்க்கை முடங்கும்.368- எத்தனை முறை விழுந்தோமென வருந்தாமல் எழ முயற்சி செய்.369- முயற்சி என்பதை முடக்கும் போது முழுமை பெறாமல் கருகும்.370- முயற்சி ஆற்றல் தொடர தொடர வலிமை தடைகளைத் தகர்த்தும்.371- குழந்தை ஒன்றை விரும்பும் உறுதியாய் அதை அடைந்தே தீரும்.372- திறமை என்பது திறவுகோல் போன்றது திறந்தால் பொக்கிஷம் கிட்டும்.
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
16- கனிந்த பார்வை பட்டால் முருகா! பட்ட மரம் துளிரும்! தனித்து செயல் செய்ய வைப்பாய்! தரணிக்கு சேர வைப்பாய் !சீனி போல் இனிக்க வைப்பாய்! சீவன் வாழ வைப்பாய்! தீனி கூட வேண்டாம் முருகா! தீவிரமாய் உன்னைப் பற்ற!
361-தன்னை அறிதல் சூழ்நிலை அறிதல் ஆற்றல் அறிதல் வளம். 362-அணையின் நீர்மட்டம் நிறைந்து வழிவது போல் அறிவின் ஆற்றலும் வெளிப்படும்.363- மரம் வைப்பவன் கனிக்கு காத்திருப்பான் மாற்றமும் காத்திருக்க கனியும்.364-கல்விப் பாடம் கண் போன்றது அனுபவப் பாடம் சுவாசம். 365-விரும்பியது கிடைக்காமல் மூளையில் முடங்காமல் கிடைப்பது ஏற்று சிறப்பீர்.366- பல நட்சத்திரம் இருந்தும் வானிற்கு இருள் ஒரு சூரியன் உலகிற்கு ஒளி.
15-காய் மனம் இருந்தால் கூட கால மாற்றம் செய்வாய்! வாய் மணக்க பாடச் செய்து காதார கேட்டு மகிழ்வாய்! தாய் அருள் பெற்ற முருகா தருவாய் அருளை முருகா !சேய் நின் அருளிருக்க வேறு என்ன வேண்டும் முருகா!
355-வீட்டுக்கு அடித்தளம் உறுதி வேண்டும் வாழ்க்கைக்கு உண்மையில் உறுதி. 356-கரும்பின் இனிப்பாய் பேச்சு இறந்தால் கடவுள் கூட அருகில்.357- ஆற்றல் என்பது அறிய சக்தி அறிந்து தெளிவது மேல்.358- ஆபத்து நம்மை அழுத்தும் போது அறிவது அறிவது தான் திறமை. 359-புற ஆசைகளை புறம் தள்ளினால் ஆழ்மனதில் ஆன்மா விழிக்கும்.360- ஆசை அளவோடு இருப்பின் நன்மை பேராசை அழிக்கும் நம்மை.
14-ஆற்று நீர் பாய்ந்த இடம் செழித்து வளர்வது போல்! உற்று நீர் உள்ள முருகா! உரையாது உன்னருள் முருகா!தூற்றுதல் வந்தால் கூட தூயவன் அருளால் தூரப் போகும்! நாற்றுப் போல் வளரும் முருகா! நல்லதே வந்து சேரும்.
349-கல்வி கற்பக விருட்சம் போன்றது காலத்தை கடந்தும் நிற்பது.350- இயற்கை அழகு எல்லோருக்கும் உண்டு இயல்பாய் பேணுதல் சிறப்பு. 351-நேரம் வாழ்வின் உயிர் நாடி உணர்ந்து உழைத்தால் உயர்வு. 352-நேர்மை சுவாச உறுப்பாய் இருந்தால் ஆயில் நீண்டு வாழலாம்.353- தன்னை நேசிக்க கற்றுக் கொண்டால் பிறரை நேசிப்பது எளிது.354- வெற்றி தோல்வி நாணய இருபக்கம் நேரே நின்றால் தடுமாறும்.
13-தட்டு தடுமாற்றம் இருக்காது முருகா! தன்னம்பிக்கை கொடுக்கும் முருகா!கட்டு மனம் தரும் முருகா! கதியென பணிந்தவர் கண்டு !மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு முருகா! மகிமை செய்ய வருவாய் !கிட்டவர் நெருங்கார் முருகா உன்! அருள் பெற்ற பின்னே!
343-மனிதனிடம் குறையை கூறின் ஏளனம் இறைவனிடம் கூறின் கருணை.344- முடியும் என்பது தாரக மந்திரம் ஆனால் முடியாத செயல் இல்லை.345- சமாதியை நினைத்து துன்பம் கொள்ளாமல் சாதனையை நினைத்து வெல்வோம்.346- தோல்வி வரும் போது தள்ளிப்போடு நேரம் வரும்போது செயல்படு. 347-வாழ்க்கை என்பது வசந்த காலம் அனுபவிப்பதே சொர்க்க வாசல்.348- பந்தயம் என்ற பகடக் காயில் சூதை விலக்கி வெல்வீர்.
சுற்றி சுற்றி சுழலும் உலகம் சுற்றிக் கொண்டே வரும்! சுற்றி சுற்றி உன்னை வந்தால் உலகப் பிறவிஅகலும்! பற்றி பற்றி பாதம் பணிந்தால் மலரடி சேர முடியும்! ஒற்றி ஒற்றி அடைந்த போது ஒருமையுடன் ஏற்றுக் கொள்வாய்!
