313-வளர்பிறை போல் வளர்வதே முயற்சி தேய்பிறையாய் தேய்ந்தால் வீண்.314- சினம் சீரான வாழ்வை கெடுக்கும் சாந்தம் சாதனை புரியும். 315-நிகழ்காலம் வயலில் பாயும் நீராகும் எதிர்காலம் விளைந்த கதிர்.316- கவலை என்பது ஒருவகை நோய் துணிந்த துரத்த ஓடும்.317- எதை சேமிக்கிறோமோ அதுவே கிடைக்கும் நல்லதை சேமித்தல் நலம்.318- மேதாவி பேச்சு மேடையில் வீச்சாகும் மேன்மையான வாழ்விற்கு போதாது.
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
7-சங்கத் தமிழ் மூன்றும் வளர்த்த பாண்டிய நாட்டு குருதி !சங்கமம் ஆனதோ உடலில் பாய்ந்து சண்முகன் பாதம் பணிய !சங்கரன் நெற்றி நெருப்பில் பிறந்த கந்தா கார்த்திகை மைந்தா! சங்கரி அழைத்ததும் ஒரு முகமாய் காட்சி தந்த ஆறுமுகா!
307- ஓடும் ஓட்டத்தில் ஓடுவது எளிது எதிர்த்து நிற்பதே துணிவு.308- உலக நந்தவனத்தில் பூக்கும் பூவாய் உறவாடும் உள்ளம் உயர்வு.309- தடாபுடா வேலை தடுமாற வைக்கும் நிதான வேலை முழுமை யாக்கும். 310-உரம் போட மரம் வளரும் அறம் அகிலம் வெல்லும்.311- தானே தன்புகழ் பரவ பேசுபவன் தரமான செயல் செய்யான். 312-கடலினும் பெரியது பொறுமை காலம் கடந்து கனியாய் கொடுக்கும்.
6-உன்னை எல்லாமுமாய் பார்க்கும் பார்வை அன்பாய் கொடுத்த முருகா!என்னை எத்தனை முறை மறந்தாலும் புத்துயிறாய் நினைவில் முருகா! இன்னல் வரும் போது எல்லாம் காப்பவன் நீதான் முருகா!கன்னி நாட்டில் பிறக்க வைத்த கனியமுதே கன்னித்தமிழே முருகா!
301-தயங்கும் ஒவ்வொரு மணித் துளியும் பின்னே தள்ளப் படுவோம். 302-சிக்கனம் என்பது சீராய் இருந்தால் வறுமை வாயிலை தொடாது. 303-குறையக்குறைய உண்பவன் உடல் வருத்தம் கொள்வான் குறைத்துண்பம் நீண்டு வாழ்வான்.304- திட்டுவது நம்மை திடமாக்கச் செய்யும் மௌனமாய் ஏற்றல் சிறப்பு.305- தேடித் தேடி அலைவது துயரம் தேடாமல் கிடைப்பது அமைதி.306- ஒழுங்காய் செல்ல கற்றுக் கொடுத்தது யாரு எறும்பே மனிதருக்கு கூறு.
295-மிட்டாய் தின்னத் தின்ன பல்லில் ஓட்டை படிக்கப் படிக்க மனதில் தெளிவு.296- புறத்தை மட்டும் பார்ப்பவன் மனிதன் அகத்தை அறிபவன் கவிஞன்.297-போகுமிடத்தைப் பொறுத்து பூவுக்குப் பெருமை எண்ணமே மனதிற்கு பெருமை. 298-அன்பு என்பது பலாப்பழம் போன்றது அகந்தை என்பது கள்ளிச்செடி.299- மலரின் மணம் வாடும்வரை இருக்கும் மனித மணம் செயலால் நிலைக்கும்.300- பலமலர்கள் தொடுத்தால் கதம்பம் ஆகும் பலர் இணைந்தால் செயல் பெருகும்.
289-மௌனம் காத்தல் மனதிற்கு நலம் பொறாமை குறைய வலம். 290-பேச்சில் துணிவு விரையம் மனித செயலின் துணிவு சாதனை. 291-அஸ்திவாரம் போடுவது கட்டட உறுதி திட்டமிடல் வாழ்விற்கு உறுதி .292-ஏழை என்பவன் கோழையாக இல்லாததினால் வெற்றி என்னும் படியில்.293- உன்னை உணர்ந்த ஒவ்வொரு வினாடியும் உயர்வு உன்னை நெருங்கி.294- பழைய தங்கம் புதிய நகை பழமை எண்ணம் புதுமை சிறப்பு.
எத்தனை முறை அழைத்தாலும் வெறுப்பு இல்லாமல் விரும்பி வருவாய்!சித்தனே சிக்குண்டேன் உன்னிடம் முருகா! சிறை பட்டேன் மீளமாட்டேன்! பித்தனைப் போல் இருந்தாலும் பரவாயில்லை! மருந்து தின்ன மாட்டேன்! மத்தம் தெளிய மாட்டேன் முருகன்! மறந்தும் பிரிய மாட்டேன்!
289-மௌனம் காத்தல் மனதிற்கு நலம் பொறாமை குறைய வலம். 290-பேச்சில் துணிவு விரையம் மனித செயலின் துணிவு சாதனை. 291-அஸ்திவாரம் போடுவது கட்டட உறுதி திட்டமிடல் வாழ்விற்கு உறுதி .292-ஏழை என்பவன் கோழையாக இல்லாததினால் வெற்றி என்னும் படியில்.293- உன்னை உணர்ந்த ஒவ்வொரு வினாடியும் உயர்வு உன்னை நெருங்கி.294- பழைய தங்கம் புதிய நகை பழமை எண்ணம் புதுமை சிறப்பு.
3- கருத்த மேகத்தில் சிவந்து வருவாய்! வெளுத்து மழையாய் வருவாய் !தருமம் செய்யும் இடத்தில் எல்லாம்! தேவதையாய் காக்க வருவாய் !மருத நிலத்து முருகா நீ! மருந்தாய் காக்க வருவாய் !வருந்த அழைத்தால் முருகா நீ ! உடனே ஓடி வருவாய்!
